தியானப் பாடல்கள் | 242-இசை ஒன்று இசைக்கின்றேன் |
இசை ஒன்று இசைக்கின்றேன் - இறைவா எளிய குரல்தனிலே என் இதயத் துடிப்புக்களோ - என் இசையின் குரலுக்குத் தாளங்களே - (இசை ஒன்று) காலத்தில் குரல்தனில் தேவா - உன் காலடி ஓசை கேட்கின்றது ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2 மழலையின் சிரிப்பில் உன் எழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே - 2 (இசை ஒன்று) ஏழையின் வியர்வையில் இறைவா - உன் சிலுவைத் தியாகம் தொடர்கின்றது சமத்துவம் இங்கே வாழ்ந்திட - 2 உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம் - 2 (இசை ஒன்று) |