தியானப் பாடல்கள் | 241-ஆண்டவனே எந்தன் ஆலயமே |
ஆண்டவனே எந்தன் ஆலயமே உன்னில் தங்கிட நானும் வந்தேன் நிம்மதியே உந்தன் சன்னிதியே உன்னில் ஆறுதல் தேடி வந்தேன் சுமைகள் சுமந்து சோர்ந்திடும் மனதை வாவென்றழைத்தவனே (2) நெஞ்சம் கனக்கும் நேரங்களில் உந்தன் பாதமே தஞ்சம் என்று அமரும்போது அமைதி பிறக்குதே கவலை நோய்க்கு மருந்து - உந்தன் கருணைப் பார்வையே கண்களின் ஈரம் துடைக்க - உந்தன் கரங்கள் போதுமே (2) உறவை வளர்க்கும் நல்ல நிலமே உந்தன் ஆலயம் - அதில் உரமாய் என்னைத் தந்து மகிழ இதயம் துடிக்குதே உந்தன் நிழலில் தங்கி வாழும் இன்பம் போதுமே எந்தன் ஐPவன் அன்பில் நிறையும் எந்த நாளுமே (2) |