தியானப் பாடல்கள் | 240-ஆண்டவரை என் உள்ளம் |
ஆண்டவரை என் உள்ளம் போற்றிப்பாடுதே மீட்பராம் கடவுளையே நினைத்துப்பாடுதே இறைவனையே போற்றிப்பாடுதே மீட்பரையே நினைத்துப்பாடுதே அடிமையின் தலைமுறையாய் நோக்கினார் தலைமுறைகள் எல்லாமே வாழ்த்திடுமே வல்லவர் அதிசயங்கள் செய்துள்ளார் தூயவர் என்பதே அவர் பெயராகும் (2) தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார் பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார் செல்வரை வெறுங்கையராய் அனுப்பியுள்ளார் இஸ்ராயேலுக்குத் துணையாய் இருந்து வருகிறார் (2) அஞ்சுகின்ற தலைமுறைக்கு இரங்குகின்றார் தோள்வலிமை இறைவனே காட்டியுள்ளார் செருக்குள்ள மனிதரையே சிதறடித்தார் அரியணைவாழ் வலியோரை தூக்கி வீசினார் |