Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  239-ஆண்டவரை அகமகிழ்ந்து போற்றுங்கள்  

ஆண்டவரை அகமகிழ்ந்து போற்றுங்கள்
என்றென்றும் அவர் பெயரைப் பாடுங்கள்
நாம் போற்றவும் புகழவும் தகுதியானவர் (2)

அவர் மாட்சியுள்ள திருநாமத்தைப் போற்றுங்கள்
அவர் மகிமையுள்ள ஆலயத்தில் போற்றுங்கள் 2
என்றென்றும் எல்லோர்க்கும் மேலாக
வாழ்த்துங்கள் ஆண்டவரைப் போற்றுங்கள் 2 தினம்
அவர் அரசின் அரியணைமேல் ஆண்டவரைப் போற்றுங்கள்
படைப்பு அனைத்தும் படைத்த தேவன் புகழைப்பாடுங்கள்
மகிமை மாண்பு கொண்ட தேவன் புகழைப் பாடுங்கள் 2

வானும் காற்றும் மழையும் உம்மை வாழ்த்தட்டும்
ஆறுகளே குன்றுகளே போற்றட்டும்
ஆண்டவரின் எல்லா வித படைப்புக்களே
வாழ்த்துங்கள் ஆண்டவரைப் போற்றுங்கள் 2 தினம்
அவர் அரசின் அரியணைமேல் ஆண்டவரைப் போற்றுங்கள்
படைப்பு அனைத்தும் படைத்த தேவன் புகழைப்பாடுங்கள்
மகிமை மாண்பு கொண்ட தேவன் புகழைப் பாடுங்கள்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்