தியானப் பாடல்கள் | 238-ஆண்டவரே பேசும் உம் அடியவன் |
ஆண்டவரே பேசும் உம் அடியவன் நான் கேட்கின்றேன் ஆண்டவரே பேசும் ஏழைகளின் பெருமூச்சில் எழுவது உன் அழைப்பே எடுத்தணைக்கும் குழந்தையின் வாய் மழலை என்னும் சொல்லே இறைவாக்கினர் வழியாக பேசுவதும் நீரே மறைநூலின் வாசகத்தில் கேட்பது உன் வாக்கே இருபுறமும் கருக்கான வாளாம் உம் வார்த்தை இதயமெல்லாம் நலமடைய இறைவா நீர் பேசும் |