Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  237-ஆண்டவரே பேசும் அடியவன்  
ஆண்டவரே பேசும் அடியவன் நான் கேட்கிறேன் - உன்
அடியவன் நான் கேட்கிறேன்
பேசும் பேசும் பேசும் பேசும்

வாழ்வினில் வரும் துன்ப சூழ்நிலையில் உன்
வார்த்தை வழி காட்ட வேண்டும்
தாழ்வினில் நான் மூழ்கித் தவிக்கின்றபோது என்
நிறை வாழ்வே நீ தேற்ற வேண்டும் - உன்
அருள் ஒன்றே நான் தேட வேண்டும் - அது
என் வாழ்வை வளமாக்க வேண்டும்

வாழ்ந்திடும் மாந்தர்கள் உறவினிலே உன்
வார்த்தை விளக்காக வேண்டும்
நாளும் நடக்கின்ற செயல்களிலே உன்
கரமொன்றே நான் காண வேண்டும் - என்
இதயத்தில் நீ பேச வேண்டும் - உன்
இறை வார்த்தை வாழ்வாக வேண்டும்

மகிழ்ச்சியூட்டும் இடத்தில் எனக்குப் பங்கு கிடைத்தது
என் உரிமை பேரு எனக்கு நேர்த்தியாயிற்று 2
அறிவுரைத்த ஆண்டவரை வாழ்த்திடுவேன் - 2
இரவில்கூட என்னிதயம் பாடிடுமே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்