தியானப் பாடல்கள் | 233-ஆண்டவரின் வாக்கு |
ஆண்டவரின் வாக்கு என் பாதை விளக்கு ஆண்டவரின் வாக்கு வாழ்வின் மீட்பு உயிருள்ள வாக்கு.. ஆற்றல் மிகு வாக்கு.. வலுவூட்டும் வாக்கு.. வாழ்வாகும் வாக்கு.. தீயவழி எதிலும் நான் கால் வைப்பதில்லை பொன் வெள்ளி எதிலும் என்மனம் போவதில்லை பொய் வார்த்தை எதுவும் என் வாய் சொல்வதில்லை உன் நியமங்களை விட்டு நெறி பிறழ்வது இல்லை ஏனெனில் உம் வார்த்தை வழிகாட்டும் துன்பமும் கவலையும் தினம் தோறும் உண்டு தீயவரின் கண்ணிகள் திசை தோறும் உண்டு சதிசெய்து வீழ்த்துவோர் எம்மருகில் உண்டு வஞ்சகத்தின் நாவுகள் எனைச் சுற்றி உண்டு ஆயினும் நீரே என் பாதுகாப்பு |