தியானப் பாடல்கள் | 232-ஆண்டவரின் வழிதனையே |
ஆண்டவரின் வழிதனையே ஆயத்தம் செய்யுங்கள் ஆழ்வெளியில் அவர் பாதைகளை செம்மைப்படுத்துங்கள் கோணலானவை நேராகவும், பள்ளத்தாக்குகள் சீராகவும் ஆண்டவரின் மகிமையினை எல்லோரும் காண்பார்கள் கூறிடுமே புல் உலருமே ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் வாழுமே வான் மழையென அவரருளில் புவி வருமே ஏழையர் எளியவர் விடுதலையென எழும் என்தேவனே உன் நாளையை கண்கள் காண்கின்ற பேறுபெறும் நம் வாழ்விலே நன்மை சேருமே நலிவென நாம் கண்டவை வலிமையால் வளருமே அகமதில் அருளொளி அகலென வளர்ந்திடுமே இகமதில் இருள்பகைகள் இல்லையென வரும் என்தேவனே உன் நாளையை கண்கள் காண்கின்ற பேறுபெறும் |