தியானப் பாடல்கள் | 231-ஆண்டவன் ஆலய |
ஆண்டவன் ஆலய அகலெனவே ஆண்டுகள் ஆயிரம் எரிந்திடுவேன் இதழ்களும் உதிருமுன் மலரென்னை - அவன் பதங்களில் படைத்திட விரும்புகின்றேன் புதியதோர் தழலொன்று அகத்தினிலே உதித்திட இறைஞ்சினேன் இறைவனையே தழலது உளமதில் நிறைந்திருக்கும் - பல பழிகளைப் போக்கிட பொலிவுறுவேன் உளத்தினை மெழுகென உருக்கி வந்தேன் மலரடி மருங்கினில் பொழிந்துவிட்டேன் கலை எழில் கலந்திடும் கவிதை என - அவன் கரையில்லா கருணையைப் பாடிடுவேன் வழியின்றி ஒளியின்றி மனமிழந்து வாழ்வினை இருளினில் கரைத்துவிட்டேன் அழைத்திடும் அவன் குரல் கேட்டெனையே - அவன் அணைப்பினில் சிலை என நிறுத்திடுவேன் |