Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  230-ஆகட்டும் ஆண்டவரே  

ஆகட்டும் ஆண்டவரே - என்னில்
அருளுயிர் தந்திடும் அன்பருன் வார்த்தை
ஆகட்டும் ஆண்டவரே என்னில்

வாழ்வை தந்திடும் வார்த்தை - அதன்
வழியாய் அமைந்ததுன் வார்த்தை
தேன்போல் இனித்திடும் வார்த்தை - என்னை
தேடியே வந்ததும் வார்த்தை

சிலுவை சுமந்திடும் வார்த்தை - தன்
செந்நீர் சிந்திடும் வார்த்தை
சீரருள் பொங்கிடும் வார்த்தை - என்
சிந்தையைக் கவர்ந்திடும் வார்த்தை

சாந்தம் கொண்டதும் வார்த்தை - என்
சாவை அழித்ததும் வார்த்தை
சொந்தம் கொள்வதும் வார்த்தை - மனச்
சோர்வை நீக்கிடும் வார்த்தை




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்