தியானப் பாடல்கள் | 229-அன்னையின் முகத்தினிலே |
அன்னையின் முகத்தினிலே உன் அன்பு ஞாபகம் நண்பனின் முகத்தினிலே உன் நேசம் ஞாபகம் குழந்தையின் முகத்தினிலே உன் உள்ளம் ஞாபகம் ஏழையின் முகத்தினிலே உன் தாகம் ஞாபகம் எந்த முகம் பார்த்தாலும் உந்தன் முகம் ஞாபகம் எந்தன் முகம் பார்க்கையிலே உன் சாயல் ஞாபகம் தாயுமானவனே தந்தையுமானவனே நெஞ்சைத் தாலாட்டும் உந்தன் ஞாபகம் ஆலயமணியோசை நான் கேட்கும் போதெல்லாம் ஆண்டவனே நீர் பேசும் அமுதக் குரல் ஞாபகம் ஆலயத்தில் உன்னருகில் நான் அமரும் போதெல்லாம் எனக்காய் காத்திருந்த ஏக்கம் ஞாபகம் வான்மழை பொழிகையிலே உன் கருணை ஞாபகம் உண்ணும் உணவினிலே உன் வளமை ஞாபகம் உறங்கும் வேளையிலே உன் சுவாசம் ஞாபகம் தனிமையில் நான் கலங்கி அழுகையிலே தாயாய் தாலாட்டும் உந்தன் ஞாபகம் உன் வார்த்தை வாசித்து வாழ்வாக்கும் போதெல்லாம் தேவனே எனை நாடும் உன்தேடல் ஞாபகம் என்; வாழ்க்கைப் பயணத்தில் நான் நடக்கும் போதெல்லாம் பாதை காட்டும் உன் சுவடுகள் ஞாபகம் உறவுகள் எனை வெறுக்கும் உறவாடியே ஞாபகம் உணர்வுகள் இழந்தபோதும் உன் வலிமை ஞாபகம் உனக்காய் இருப்பேனென நீ சொன்ன ஞாபகம் தனிமையில் நான் கலங்கி அழுகையிலே தாயாய் தாலாட்டும் உந்தன் ஞாபகம் |