தியானப் பாடல்கள் | 227-அன்பே கடவுள் என்றால் |
அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல் அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல் மண்ணோர்கள் மொழி பேசினும் - அன்புக்கு ஈடாகுமா? விண்ணோர்கள் மொழி பேசினும் - அன்புக்கு ஈடாகுமா? இறைவாக்கு சொல் வரமும் - அன்புக்கு ஈடாகுமா? மறை பொருள் உணர் பொருளும் - அன்புக்கு ஈடாகுமா? அளவில்லா அறிவுத் திறனும் - அன்புக்கு ஈடாகுமா? மலை பெயர் விசுவாசமும் - அன்புக்கு ஈடாகுமா? உன் பொருள் வழங்கும் தன்மை - அன்புக்கு ஈடாகுமா? என் உடல் எரிப்பதுமே - அன்புக்கு ஈடாகுமா? நம்பிக்கை விசுவாசமும் நிலையாக நின்றுவிடும் நிலையாய் நிற்கும் அவை அன்புக்கு ஈடாகுமா? |