தியானப் பாடல்கள் | 226-அன்பே அன்பே |
அன்பே அன்பே இறையன்பே எந்தன் ஒளியாக வா அன்பே அன்பே உண்மை அன்பே எந்தன் வழியாக வா (2) மதங்கள் பல இன்று மதமானாலும் உந்தன் அன்பு மதம் ஒன்றே வேதங்கள் பல இன்று இருந்தாலும் உன் உண்மை வேதம் என்றும் ஒன்றே என் பாதை எல்லாம் ஒளியாக வீசி கரம் பிடித்து நடத்திடு (2) செல்வங்கள் பல இங்கு குவிந்தாலும் உன் இதய அமைதி ஒன்றே போதும் மனித சுதந்திரங்கள் மலர்ந்தாலும் உன் அன்பின் மீட்பு எனில் போதும் என் உள்ளம் எல்லாம் உன் அமைதி பொழிந்து என் இதயம் மீட்டிடு (2) |