Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  225-அன்பென்னும் சுரங்களில்  

அன்பென்னும் சுரங்களில் ஆ... ஆ...
தெய்வீக சந்தங்களில் ஆ..... ஆ...
விண்ணக ராகத்தில் மீட்பென்னும்
கீதத்தை பாடியே என் தலைவா
உன் அன்பு கானம் பாட ஆ... ஆ...
என்னில் என்ன ஆனந்தம்
ஆ.....ஆ.... என்ன ஆனந்தம் (2)

கானக் குயிலின் ராகமும் ஆ... ஆ...
தென்றல் தவழும் கீதமும் ஆ... ஆ...
அருவி விழும் ஓசையும் ஆ...
அலைகள் பாடும் இன்ப ராகம்
உந்தன் சொந்த ராகங்கள்
ஆ... ஆ...உந்தன் படைப்பிலே ஆ... ஆ...
எத்தனை ராகங்கள் ஆ... ஆ...
இறைவா எத்தனை ராகங்கள் ஆ...ஆ... எத்தனை ராகங்கள்

பறவை பாடும் கானமும் ஆ... ஆ...
பாயும் நதியின் ஓசையும் ஆ... ஆ...
வண்டினத்தின் ரீங்காரமும் ஆ... ஆ...
எந்தன் ஆன்ம சுரங்கள் அனைத்தும்
உந்தன் சொந்த ராகங்கள்
ஆ... ஆ...உந்தன் படைப்பிலே ஆ... ஆ...
எத்தனை ராகங்கள் ஆ... ஆ...
இறைவா எத்தனை ராகங்கள் ஆ... ஆ... எத்தனை ராகங்கள்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்