தியானப் பாடல்கள் | 223-அன்புள்ள சீடனுக்கு |
அன்புள்ள சீடனுக்கு உன் அன்பன் இயேசு நான் எழுதும் கடிதம் உனைப் பின்தொடர்வேன் என்றவனே எங்கே நீ சென்றாயோ (2) - 2 தாயின் கருவில் உருவாகுமுன்னே உனை நான் தெரிந்து கொண்டேன் சீடன் என்ற உறவைத் தந்து திருநிலைப்படுத்தி நின்றேன் பலவீனம் உனில் கண்டு வருந்தாதே பலம் தர நான் உண்டு கலங்காதே (2) தொடர்ந்து போராடு தோல்விகளோடு ஏற்றுக்கொள்ள நண்பன் நான் உண்டு - உன் - 2 உலகம் தருகின்ற இன்பமெல்லாம் குப்பையென ஒதுக்கிவிடு உயிரே போனாலும் இறை விருப்பம் நிறைவேற்ற உறுதி எடு துன்பத்தில் தளரா மனம் கொண்டு துயரத்தை செபத்தால் வென்று விடு (2) பகைமை உனில் வேண்டாம் அன்பால் உலகை வென்றிடவே தொடர்ந்து போராடு நீ தொடர்ந்து போராடு |