தியானப் பாடல்கள் | 222-அன்புக்குப் பாடல் |
அன்புக்குப் பாடல் பாடுவேன் நெஞ்சத்தில் மன்னனை நாடுவேன் இன்பத்தின் ஊற்று இயேசுவே - உன் இன்புகழ் பாடி மகிழ்ந்திடுவேன் வேதனை ஆயிரம் நான் அடைந்தேன் - அந்த வேளையில் ஊன்றுகோல் நீ தெரிந்தேன் (2) உயிரின் வார்த்தையே எந்தன் உள்ளத்தில் வாழுமே - 2 உன் நாமம் பாடுகையில் என் நாவும் இனித்திடுமே கல்வாரி மலையில் உன்னுயிர் தந்ததும் எல்லோர்க்கும் வாழ்வாய் எழுந்ததுவும் (2) அன்பின் ஆட்சியாய் என்றும் இன்பத் தாழ்ச்சியாய் - 2 சொல்லில்லை கூறிடவே இசையில்லை பாடிடவே |