தியானப் பாடல்கள் | 220-அன்பு அன்பு அன்பு |
அன்பு அன்பு அன்பு பண்பினில் உயர்ந்தது அன்பு 2 விண்ணில் மண்ணில் வாழும் யாவும் பேசும் மொழிதான் அன்பு 2 அன்புக்காய் அனைத்தையும் இழந்திடுவோம் அன்பேதான் கடவுள் என்று முழங்கிடுவோம் - 2 தனக்காக வாழ்வதெல்லாம் தகர்ந்து போகும் அன்பு தன்னைத்தானே அழிப்பதுவே என்றும் தூய அன்பு இயேசு காட்டிய அன்பு இது கல்வாரி சொல்லும் அன்பு காலம் கடந்து அவரில் நம்மை இணைப்பது இந்த அன்பு மகிழ்வரோடு மகிழ்வதெல்லாம் மடிந்து போகும் அன்பு அழுவரோடு அழுவதுமே ஆழம் மிகுந்த அன்பு மனிதம் காக்கும் அன்பு இது புனிதம் தேடும் அன்பு சொந்தம் தாண்டி நட்பில் நம்மை சேர்ப்பது இந்த அன்பு |