Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  219-அன்பின் தீபம் ஏற்ற வேண்டும்  

அன்பின் தீபம் ஏற்ற வேண்டும்
அகிலம் ஒளிரவே
அமைதிப் பூக்கள் தூவ வேண்டும்
மனிதம் மலரவே
உண்மை கீதம் இசைக்க வேண்டும்
நீதி செழிக்கவே
இறை உதயம் காணவே ஆ.....
இறைவன் அரசு இதுவன்றோ
இனிதே வாழ்ந்திடுவோம் (2)

உண்மைக்காக உயிரைத் துறந்து
தியாக வாழ்வு நாளும் வாழ்ந்து
அன்பின் தூதனாய் ஆ... பண்பின் வேந்தனாய் ஆ...
அன்பின் தூதனாய் பண்பின் வேந்தனாய்
வாழ்வோம் மாண்பினில்
படைப்போம் புதிய வானகம்
படைப்போம் புதிய வையகம் (2)

பகிர்ந்து வாழ்ந்து பகிர்வில் உயர்ந்து
கருணை மழையில் நாளும் நனைந்து
பொறுமை உணர்விலே ஆ... உலகை எழுப்புவோம் ஆ...
பொறுமை உணர்வில் உலகை எழுப்பி
மகிழ்வோம் இறைவனில்
படைப்போம் புதிய வானகம்
படைப்போம் புதிய வையகம் (2)



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்