Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  218-அழகிய கவிதையில் பாடிடுவேன்  

அழகிய கவிதையில் பாடிடுவேன்
அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன்

அறிவிலி எனையே அவர் நினைத்தார்
ஆற்றல் அனைத்தும் எனக்களித்தார் - 2
எரிந்திடும் துயரில் எனைக் காத்தார்
எனவே அவர் என் ஆண்டவரே

துன்பச் சூழல்கள் சூழ்கையிலே
துயரக் கறைகள் படர்கையிலே - 2
அன்பின் சுரத்தால் அரவணைத்தார்
ஆகவே அவர் என் ஆண்டவரே





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்