Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  217-அழகான பா ஒன்று நான் பாடவா  

அழகான பா ஒன்று நான் பாடவா
அன்பே என் அரசே - உன்
அருள் வேண்டவா
எந்நாளும் என் ஜீவன் நீயல்லவா
என் தேகம் நீ தந்த பொருளல்லவா

கார்கால மேகம் ஆ...
பனித்தூறல் தூவ ஆ...
கானத்துக் குயில்கள் ஆ...
கீதங்கள் பாட ஆ... (2)
என் ஜீவனே என் உயிர் நேசனே
எந்நாளும் என் கீதம் நீ கேட்கவே

மணம் வீசும் மலர்கள் ஆ...
மன்னன் புகழ் பாட ஆ...
மரகத வீணை ஆ...
மனதினை உருக்க ஆ... (2)
என் ஜீவனே என் உயிர் நேசனே
எந்நாளும் என் கீதம் நீ கேட்கவே




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்