தியானப் பாடல்கள் | 216-அரவணைக்கும் அன்பு தெய்வமே |
அரவணைக்கும் அன்பு தெய்வமே - இயேசுவே உன் அடியெடுத்து நான் செல்லும் பாதைகளெல்லாம் (2) என்னோடு தொடர்ந்து அரவணைக்க வேண்டுமே - 2 சோகங்கள் பலகோடி சூழ்ந்திடும் வேளையில் - உன் சிறகினுள் எனை மூடி அடைக்கலம் தரவேண்டும் (2) உந்தன் புது உறவிலே கவலையெல்லாம் மறந்து - 2 உலகெல்லாம் நற்செய்திப் பணியினைத் தொடர்வேன் வாழ்வினில் தடைகள் தொடர்ந்து வந்தாலும் - உன் வல்லமை கரம் என்னில் இருந்திட வேண்டும் (2) உந்தன் நல்துணையிலே பாதையினைத் தெரிந்து - 2 எந்நாளும் நிறைவாழ்வுப் பயணம் செல்வேன் |