Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  214-அமைதியின் தெய்வமே இறைவா  
அமைதியின் தெய்வமே இறைவா - எம்
இதயத் தலைவனே...........
அருள்வாய் அருள்வாய்
நாம் ஏங்கித்தேடுகின்ற அமைதி
அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி - (2)

நீதியின் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி அமைதி
தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி
அன்பு மொழியை விதைத்திடுவோம்
அருளின் பயிரை அறுத்திடுவோம்
அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி - (2)

உறவைப் பேணியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி
உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி
ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம்
ஏந்தும் ஆயுதம் களைந்திடுவோம்
அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி - (2)




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்