Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  213-அமைதியின் தூதனாய்  


அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே (2)
அன்பனே இறைவனே என்னிலே வாருமே

பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும் (2)
வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும்
கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும்

தளர்ச்சி ஓங்கும் போது மனத்திடம் தழைக்கவும் (2)
இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும்
துயரம் வாட்டும் நேரம் உதவி காணவும்

ஆறுதல் அன்பை அளித்து புரிதலை வளர்க்கவும்
கொடுப்பதில் நிறைவைக் கண்டு மன்னித்து வாழவும்
தன்னலம் ஒழித்து புதிய உலகம் படைக்கவும்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்