Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  211-அமைதியில் உறவாடும் இறைவா  

அமைதியில் உறவாடும் இறைவா - உம்
குரலினைக் கேட்கும் அமைதி தா (2)
பிறர் நலன் சிந்திக்கும் அமைதி தா
ஏதும் சிதைக்காத அமைதியை எனக்குள் தா

இயற்கை வளர்வது அமைதியிலே
உள்ளொளி பிறப்பதும் அமைதியிலே (2)
உன்னத உயர்மொழி அமைதியன்றோ
உன்னதர் குரலும் (அதுவன்றோ - 2)

தேடல்கள் விடைதரும் அமைதியிலே
நமை நாம் அறிவதும் அமைதியிலே (2)
உள்ளத்தில் நிறையும் அமைதியிலே
இறைவன் உரைப்பதை (அறிவோமே - 2)



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்