Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  210-அமைதி தேடி அலையும் நெஞ்சமே  

அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
நிலையான சொந்தம் நீங்காத பந்தம்
அவரின்றி வேறில்லையே

போற்றுவேன் என் தேவனை பறை சாற்றுவேன் என் நாதனை
எந்நாளுமே என் வாழ்விலே - காடு மேடு பள்ளமென்று
கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு - நாடுதே அது தேடுதே

இறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே
என்தேவனே என்தலைவனே -பரந்து விரிந்த உலகம் படைத்து
சிறந்த படைப்பாய் என்னைப் கண்ட - தேவனே என் ஜீவனே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்