Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  207-அம்மையப்பன் உந்தன் அன்பே  

நீயே நிரந்தரம் யேசுவே என் வாழ்வில்
நீயே நிரந்தரம் ஆ ஆ ஆ

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் - 2
நான் மாய்ந்த பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்-2
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் நீயே நிரந்தரம்-2-ஆ

தாயின் அன்பு சேய்க்கு இங்கு நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும்போது காப்பது நீயே நிரந்தரம் - 2
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் நீயே நிரந்தரம் - 2

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்ணும் நிஐமான நீயே நிரந்தரம் - அதன்
விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்-2
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் நீயே நிரந்தரம் - 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்