Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  207-அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க  

அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க
நெஞ்சோடு நித்தம் அவர் நினைவிருக்க - 2
உன் தாயின் உதிரத்தில் உனைத் தெரிந்தார்
உன் வாழ்வின் உறவாய் உன்னில் நிறைந்தார்

தீயின் நடுவில் தீமை இல்லை
திக்கற்ற நிலையில் துயரம் இல்லை
தோல்வி நிலையில் துவண்டு வாடும்
துன்பம் இனியும் தொடர்ந்திடாது
காக்கும் தெய்வம் காலமெல்லாம் - 2
கரத்தில் தாங்கிடுவார் - அன்பின்
கரத்தில் தாங்கிடுவார்

தூர தேசம் வாழ்க்கைப் பயணம்
தேவன் நேசம் உன்னைத் தொடரும்
பாவம் யாவும் பறந்து போகும்
பரமன் அன்பில் பனியைப் போல
வாழும் காலம் முழுதும் உன்னில்
வசந்தம் வீசிடுமே - அன்பின்
வசந்தம் வீசிடுமே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்