Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  206-அகழ்ந்திடுவார் தம்மை  



அகழ்ந்திடுவார் தம்மை - என்றும்
அன்புடன் நிலம் தாங்கும்
என்னதான் குறைகள் செய்தாலும்
உன் இதயம் தாங்கும்
என்றும் எனைத் தாங்கும்

அழுதாலும் உன்கரம் தேற்றும்
மகிழ்ந்தாலும் அது உன் நிழலில்
உன்னை நான் மறந்து வாழ்ந்தாலும்
வாழ்வதும் உன்னாலே
வல்லவன் நீதியின்றி என் உள்ளத்தில் நிறைவில்லை
உந்தன் தாளில் கூடும் பலகோடி பூவிதளுள்
நானும் ஒன்றாவேன்
உன்திரு நாளில் என்னுள்ளம் மங்களம்
பாடும் தன்னில்லம்
உன் நினைவாலே தெய்வீகம் வாழ்வு பெறும்

ஆசைகளில் தடுமாறி அது விழுந்தால்
எடுப்பதும் உன் உருவே
துன்பம் நான் அடைந்து சோர்ந்தாலும்
வாடுவதும் நீயே
என்னிடம் வலுவில்லை உன் பலமின்றி கதியில்லை
வரும் காலம் உன்னடியில் வாழ்வும் உன் மடியில்
நானும் உன் சந்நிதியில்
உம் திரு உள்ளம் என் எண்ணம்
உன் திரு சொல்லே என் சொந்தம்
உன் உறவொன்றே என் இன்பம் என்றென்றும்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்