தியானப் பாடல்கள் | 205-அகமகிழ்வோமே இன்று அனைவரும் பாடி |
அகமகிழ்வோமே இன்று அனைவரும் பாடி இகமதிலே நாம் இறைவனில் கூடி அகமகிழ்வோமே ஆழமே அறியா அவனருள் எண்ணி ஆருயிர் அளித்த அவர் பெயர் எண்ணி விண்ணவன் உரைத்த வார்த்தையை எண்ணி எண்ணரும் அருளின் ஊற்றினை எண்ணி மலர்மிசை ஏகினார் மானடி எண்ணி மறைமுதல் தலைவன் திருப்புகழ் எண்ணி இறைமகன் இங்கே எழுந்ததை எண்ணி இறைவனில் நாமே இணைந்ததை எண்ணி பாஸ்காப் பலியில் நிறை நிலை எண்ணி ஆருயிர் அடைந்த பெருநிலை எண்ணி இறையருள் அளித்த உறவினை எண்ணி கருணையின் தலைவன் பெருமையை எண்ணி |