Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   1603-மூவொரு இறைவன்  



மூவொரு இறைவன் அன்பு உறவு
பூவினில் நமது குடும்ப வாழ்வு
ஆதி முதல் நன்றெனக் கண்டு
ஆண்டவர் தாமே அமைத்த படைப்பு

அன்பின் ஆலயம் குடும்பம்
உறவின் சங்கமம் குடும்பம்
வளம் மிகு ஆன்மீகம் குடும்பம்
பேரின்ப ஆரம்பக் குடும்பம்

ஆணும் பெண்ணுமாய் மனிதரைப் படைத்தார் (2)
அன்பு உறவை அவர்களில் விதைத்தார் (2)
குடும்ப வாழ்வைத் துவக்கியே வைத்தார்
குழுமம் எனவே வளர்ந்திடப் பணித்தார்

கிறீஸ்து யேசுபோல் மணமகன் வாழ
திருச்சபை எனவே மணமகள் ஒளிர
மொழி என்னும் அருட்சாதனத்தில்
இருவரும் இணையும் இல்லறம் வாழ்க



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்