தூய ஆவியானவர் பாடல் | அசைவாடும் ஆவியே |
அசைவாடும் ஆவியே எம்மில் இறங்கி வாருமே உன்னதத்தின் ஆவியை - இங்கு ஊற்ற வாருமே வானம் திறந்து வாழ்வினை அளிக்க அனலாய் வாருமே வெண்புறா வடிவில் வல்லமை பொழிய அருளாய் வாருமே சீனாய் மலையில் யோர்தான் நதியின் ஆட்கொண்ட ஆவியே எம்மவர் நடுவில் பலமதை அளிக்க ஆற்றலாய் வாருமே அக்கினி மயமே அபிசேக மழையே ஆன்மாவில் வாருமே நோய்களை நீக்கி நலமதைச் சேர்க்க கொடையாய் வாருமே ஆற்றலின் ஊற்றே ஞானத்தின் கனியே அற்புதம் நடத்துமே கண்ணீர் கவலை கட்டுகள் அறுத்து அதியசம் நிகழ்த்துமே |