Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  உன்னத வல்லமையை  
உன்னத வல்லமையை - இறைவா
எனக்குத் தாரும்
பரலோக வல்லமையை
என்னிடம் ஊற்றுமையா

உலர்ந்து போன எலும்களாய்
உலரப்பட்ட எங்களிலே
உயிர் தரும் ஆவியைக் கொண்டு
வீரச்சேனையாய் மாற்றிவிடும்

வார்த்தை இட்ட வல்லமையை
வந்து போற்றும் நாளினிலே
பகிர்ந்து இறைவா எங்களிலே
நிரம்பி வழியச் செய்தருளும்

அடிமை விலங்குகள் தகர்ந்திடவே
அக்கினி ஆவியை ஈந்திடுமே
தடைகளும் களைகளும் எரிந்திடவே
மீட்பின் ஆவியை ஈந்திடுமே






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்