தூய ஆவியானவர் பாடல் | தூய ஆவியே எழுந்தருள்வீர் |
தூய ஆவியே எழுந்தருள்வீர் - உம் அருட்சுடர் எம்மீது அனுப்பிடுவீர் வாரும் வாரும் பரிசுத்தமே வாரும் (2) எளியவர் தந்தாய் வந்தருள்வீர் நன் கொடை வள்ளலே வந்தருள்வீர் உன்னத ஆறுதல் ஆனவரே இனிய நல் தன்மையும் தருபவரே வாரும் வாரும் பரிசுத்தமே வாரும் (2) உழைப்பின் சோர்வினை நீக்கிடுவீர் வெண்மையைத் தணிக்கும் குளிர் நிழலே அழுகையில் ஆறுதல் ஆனவரே அற்புதப் பேரின்பப் பேரொளியே வாரும் வாரும் பரிசுத்தமே வாரும் (2) உம்மை நாளும் விசுவசிப்போர் நெஞ்சத்தின் ஆழம் நிரப்பிடுவீர் உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஏதுமில்லை வாரும் வாரும் பரிசுத்தமே வாரும் (2) மாசுகள் எம்மேல் கழுவிடுவீர் வரட்சியை நீரால் நனைத்திடுவீர் காயங்கள் அனைத்தும் மாற்றிடுவீர் வணங்காதவற்றை வளைத்திடுவீர் வாரும் வாரும் பரிசுத்தமே வாரும் (6) |