தூய ஆவியானவர் பாடல் | தூய ஆவியாரே துணையென |
தூய ஆவியாரே துணையென வருபவரே ஆண்டவரே ஆவியாரே அருளினை பொழிபவரே இந்நேரம் வாருமையா என்னோடு பேசுமையா புதுப்பிக்க வாருமையா புரிந்திடச் செய்யுமையா என் உள்ளத்தில் வாருமே என் காயங்கள் மாறுமே ஆறுதல் தாருமே உந்தன் அருளால் நிரப்புமே என் குடும்பத்தில் வாருமே என் குழப்பங்கள் தீருமே அமைதியை தாருமே உந்தன் அன்பால் நிரப்புமே என் பயணத்தில் வாருமே என் சோர்வுகள் மாறுமே ஆர்வத்தைத் தாருமே உந்தன் ஆசியால் நிரப்புமே |