தூய ஆவியானவர் பாடல் | 1369- தாருமே அப்பா தாருமே |
தாருமே அப்பா தாருமே வல்லமை ஆவியைத் தாருமே மாற்றுமே அப்பா மாற்றுமே பரிசுத்த ரூபமாய் மாற்றுமே ஆனந்தம் பேரின்பம் - 4 பாலை நிலங்கள் வளமாக உன்னத ஆவியை ஊற்றிடுமே பாழ்மனங்கள் நேர்மை பெற பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே பூசல்கள் அகற்றி நன்மை செய்ய ஒற்றுமை ஆவியை ஊற்றிடுமே கணவன் மனைவியாய் செபித்திடவே கருணையின் ஆவியை ஊற்றிடுமே இளமையின் இச்சைகள் களைந்திடவே பேரின்ப ஆவியை ஊற்றிடுமே தெய்வீகச் சாயலாய் என்றும் வாழ துாய்மையின் ஆவியை ஊற்றிடுமே இயேசுவை அறிந்து அன்பு செய்ய ஞானத்தின் ஆவியை ஊற்றிடுமே பேய்கள் ஓட்டி குணமளிக்க இறைவாக்கு ஆவியை ஊற்றிடுமே கல்லான இதயம் கரைந்துருக கனிவான ஆவியை ஊற்றிடுமே மனதின் காயங்கள் ஆற்றிடவே மன்னிக்கும் ஆவியை ஊற்றிடுமே |