தூய ஆவியானவர் பாடல் | பரிசுத்த ஆவியே |
பரிசுத்த ஆவியே என்னில் வாருமே தெய்வீக சக்தியால் என்னை நிரப்பும் பரிசுத்த ஆவியே எங்கள் துணையாளரே அபிசேகத்தாலே வழி நடத்தும் உலகம் எங்கும் ஒளியைத் தூவிட தீயாய் மாற்றிடுமே சோர்வுகள் எல்லாம் நீக்கி என்னில் வல்லமை தாருமே உன்னத சக்தியே தூய ஆவியே என்னில் வாருமே இறுதி நாளில் யாவர் மேலும் ஆவியைப் பொழிவேன் என்றீர் கனவுகள் சாட்சிகள் இறைவாக்குரைக்கும் ஆற்றல் தருவேன் என்றீர் இன்றைய நாளில் ஆவியின் வல்லமை என்மேல் பொழியுமையா |