தூய ஆவியானவர் பாடல் | ஆவியானவரே தூய ஆவியானவரே |
ஆவியானவரே தூய ஆவியானவரே (2) காற்றின் வடிவில் என்னைத் தள்ளும் நீரின் வடிவில் என்னை அள்ளும் நெருப்பின் வடிவில் என்னைப் பரவும் ஆவியானவரே தூய ஆவியானவரே விண்ணக வாசல் திறந்து வாரும் ஆவியானவரே வெண்புறா போல் பறந்து வாரும் ஆவியானவரே வரங்கள் கனிகள் கொடைகள் தாரும் ஆவியானவரே அபிசேகத்தால் இறைபணி செய்ய ஒற்றுமை தாருமே பெந்தகோஸ்து நாளில் அனுபவம் பகிர்ந்திட வேண்டும் வல்லமையோடு சாட்சிய வாழ்க்கை வாழ்ந்து தரவேண்டும் உலக மாந்தர் யாவரும் மேலே பொழிந்திடும் அருளை கனவுகள் சாட்சிகள் இறைவா பொழியும் ஆற்றல் தாருமே |