Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  ஆட்கொள்ள வந்திடுவாய்  



ஆட்கொள்ள வந்திடுவாய் - தூய
ஆவியே எழுந்திடுவாய் (2)
ஆவலுடன் நான் காத்திருந்தேன் - 2 என்
ஆசைகள் மலர்ந்திட விரைந்திடுவாய் - 2

அக்கினிப் பிழம்பாய்க் கணண்றெழுந்து
தீமையை எதிர்த்திட வந்திடுவாய்
இடியாய் மீண்டும் உருவெடுத்து
அடிமை வாழ்வினை அழித்திடுவாய்
இருளால் உலகம் தவிக்கின்றதே
உன் வரவால் விடியலும் தந்திடவா
வாரும் தூய ஆவியே தாரும் உமதருட் கொடைகளை - 2

புயலாய் சீறி சுழன்றெழுந்து
தாழ்வினைப் போக்கிட வந்திடுவாய்
அலையாய் தொடர்ந்து வந்திங்கு
மனிதம் மலர்ந்திடச் செய்திடுவாய்
மலையாய் துன்பம் எழுந்தாலும்
உன் வரவால் யாவும் நொறுங்கிடுமே
வாரும் தூய ஆவியே தாரும் உமதருட் கொடைகளை - 2
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்