தூய ஆவியானவர் பாடல் | 1383-வைகறையின் ஒளியாக |
வைகறையின் ஒளியாக வரும் தூய ஆவியே வானத்தின் சுடரை வழங்கும் நல் ஆவியே மெய்யான வெளிச்சமாய் மேவிடும் ஆவியே மேன்மைகள் யாவிற்கும் முதலான ஆவியே தெய்வீக கொடை ஏழும் அருள்கின்ற ஆவியே தேவனின் திருவடியே பரிசுத்த ஆவியே நேசமான இன்ப ஒளி நிறைவிக்கும் ஆவியே நெஞ்சுருகி அழுவாரை இளைப்பாற்றும் ஆவியே எளியோரின் தந்தையாய் இருந்திடும் ஆவியே உழைப்பாலே வரும் களைப்பை ஓட்டுகின்ற ஆவியே உமதாற்றல் இல்லாமல் ஒன்றுமில்லையே அவியே உண்மையில் என்னிடம் நன்மையில்லை ஆவியே மாசுகளை கழுவுகின்ற மாண்புமிகு ஆவியே மனம் வருந்தும் காயங்களை ஆற்றிடும் ஆவியே இறுதியில் மீட்பினையும் ஈந்தருளும் ஆவியே இன்பங்கள் யாவும் தர எழுந்தருளும் ஆவியே |