தூய ஆவியானவர் பாடல் | 1382-வானத்தில் இருந்து |
வானத்தில் இருந்து வையகம் எழுந்து புனித ஆவியே வருக ஞானத்தின் ஒளியை மனதினில் ஏற்றும் மாசற்ற அன்பே வருக உயிருக்கு உயிரே வாழ்வுக்கு வாழ்வே உண்மையின் வடிவே வருக பயிருக்கு மழையே பார்வையின் ஒளியே பரமனின் அருளே வருக கீழ்த்திசை வானில் வாழ்த்திசை பாடும் காலைக் கதிரே வருக ஆழ்கடல் மீதினில் அலையுடன் ஆடும் ஆனந்த நிலவே வருக - 2 மனிதனின் மனதில் மணியெனத் துலங்கும் மாணிக்க விளக்கே வருக இனிய நல் வாழ்வை உவப்புடன் வழங்கும் இன்னருட் பெருக்கே வருக - 2 |