Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1381-வானம் திறந்து வெண்புறா  
வானம் திறந்து வெண்புறா போல
இறங்கி வரவேண்டும்
தேவா வல்லமை தரவேண்டும் - 2 (2)
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே (2)

மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும் (2)
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே (2)

வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே (2)
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே (2)
அப்படியே இன்று நடக்கணுமே

பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2

அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2

கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும் - 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே - 2
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்