தூய ஆவியானவர் பாடல் | 1370-வருக தூய ஆவியே |
வருக தூய ஆவியே வருக எங்கள் நெஞ்சிலே தருக வானின் வரங்களை தவழும் தீமை விலகவே அகத்தில் ஒளியை ஏற்றவே அன்புக் கனலை மூட்டவே அறமும் ஒழுங்கும் ஓங்கவே அருளும் அன்பும் மல்கவே கொடைகள் ஏழின் வள்ளலே கொடுத்தருள்வீர் இம்மையே பாவ இருளைப் போக்கும் - உம் தேவ அருளைத்தாருமே! உம் தெய்வீகச் செயலின்றி எம்மில் நன்மை இல்லையே உம் திருச் செயலாலே - யாம் நன்கு ஜெபிக்க அருள்வீரே கவலை பயங்கள் அகலவே இறைவன் அருளில் வளரவே தூய வாழ்வு வாழவே தூய அருளில் மகிழவே |