Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1378-புதியதோர் படைப்பாய்  
புதியதோர் படைப்பாய் புவியினை மாற்றும்
புனிதத்தின் ஆவியே
வரங்களைப் பொழியும் வளம் நிறை ஊற்றே
பரிசுத்த ஆவியே - 2
மண்ணின் முகத்தை புதுப்பிக்க வருவீர்
இறை மகிழ்ச்சியை நிரப்பிட வருவீர் (2)

ஞானம் நிறைந்த சொல்வளமே
நலம் தரும் நம்பிக்கை அருட்கொடையே (2)
பிணிகளைத் தீர்க்கும் அருமருந்தே - தேவ
கனிகளால் தேற்றும் அதிசயமே (2)
மண்ணின் முகத்தை புதுப்பிக்க வருவீர்
இறை மகிழ்ச்சியை நிரப்பிட வருவீர் (2)

வானம் திறந்த தீச்சுடரே
அருட் கொடை தந்திடும் அருட் சுகமே (2)
குளிரினைப் போக்கும் அனல் காற்றே - வாழ்வின்
குறைகளைத் தீர்க்கும் நிறையருளே (2)
மண்ணின் முகத்தை புதுப்பிக்க வருவீர்
இறை மகிழ்ச்சியை நிரப்பிட வருவீர் (2)

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்