தூய ஆவியானவர் பாடல் | 1375-தூய நேய ஆவியே |
தூய நேய ஆவியே வாருமே தேவ அன்பின் அக்கினி ஊற்றுமே வீதியெங்கும் உமது சேதி சொல்லவே வேதசாட்சியாக எம்மை மாற்றுமே (2) ஆலேலூ ஆலேலூ ஆலேலூயா ஆலேலூ ஆமென் ஆலேலூயா (2) அஞ்சி நடுங்கிய உமது சீடரை அஞ்சா நெஞ்சராய் மாற்றிய ஆவியே அறைகள் மூடியே அடங்கிய சீடரை தடைகளைத் தகர்க்கும் உறுதி தந்த ஆவியே வார்த்தையாலே வாழ்வு தந்த வல்ல ஆவியே வையம் உய்ய நான் உழைக்க ஆற்றல் தாருமே (2) வையம் உய்ய... பேச அஞ்சிய உமது சீடரை அந்நிய மொழிகள் பேசச் செய்த ஆவியே அலகை விரட்டிட தயங்கிய சீடரை அலகை கண்டு அஞ்சி நடுங்கச் செய்த ஆவியே வார்த்தையாலே வாழ்வு தந்த வல்ல ஆவியே வையம் உய்ய நான் உழைக்க ஆற்றல் தாருமே (2) வையம் உய்ய... விலங்கும் சிறைகளும் முடக்கிய சீடரை விடுதலை தந்து அனுப்பி வைத்த ஆவியே அரசும் ஆட்சியும் அரட்டிய போதிலும் சிறப்பாய் பணிசெய்ய உறுதி தந்த ஆவியே வார்த்தையாலே வாழ்வு தந்த வல்ல ஆவியே வையம் உய்ய நான் உழைக்க ஆற்றல் தாருமே (2) வையம் உய்ய... துன்பம் துயரம் வாட்டிய போதிலும் அன்பர் பணி செய்ய ஆற்றல் தந்த ஆவியே சோதனை வேதனை வீழ்த்திய போதிலும் உமது போதனையால் உயிர் கொடுத்த ஆவியே வார்த்தையாலே வாழ்வு தந்த வல்ல ஆவியே வையம் உய்ய நான் உழைக்க ஆற்றல் தாருமே (2) வையம் உய்ய... |