Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1374-தூய ஆவியே தேவ  
தூய ஆவியே தேவ அக்கினியே - 2
எழுவீர் தேவா எழுவீர் என் நெஞ்சில் வருவீரே

நிரப்பும் இப்போதே நிரப்பும்
தூய ஆவியே நிரப்பும் (2)
காற்றுக்கள் உமக்கு கீழ்படியும்
நெருப்புக்கள் உமது ஊழியனாம் (2)
எங்களின் வீடுகளில் தூய ஆவியே நிரப்பும் (2)

மாற்றும் இப்போதே மாற்றும்
பாவி என்னையே மாற்றும் (2)
நெருப்பாய் பூமியில் விழுந்திடுவாய்
வல்லமையாய் இங்கு இறங்கிடுவாய் (2)
எங்களின் குடும்பங்களில் தூய ஆவியே நிரப்பும் (2)

தேற்றும் இப்போதே தேற்றும்
திடமாய் எம்மையே தேற்றும் (2)
ஊற்றாய் இங்கே பாய்ந்திடுவாய்
உயிராய் எம்மில் உறைந்திடுவாய் (2)
எங்களின் உள்ளங்களில் தூய ஆவியே நிரப்பும் (2)

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்