தூய ஆவியானவர் பாடல் | 1373-தூய ஆவியே துணையாய் நீர் |
தூய ஆவியே துணையாய் நீர் வருவீர் இறை வல்லமையும் இறை ஞானத்தையும் நிறைவாய் என்னில் பொழிந்தருள்வீர் (2) வாரும் வாருமே என்னில் நிறைவாய் வாருமே - 2 பகைமையை நான் அழிக்க நல் அன்பைத் தாருமே மன்னிப்பில் தினம் வளர நல்ல மனதினைத் தாருமே நீதி நேர்மை உண்மை வழியில் நடத்திட வாருமே - 2 வாரும் வாருமே என்னில் நிறைவாய் வாருமே - 2 அமைதியில் நான் வாழ உம் கனிகளால் நிரப்புமே மகிழ்வுடன் பணி செய்ய உமதாற்றலைத் தாருமே தாழும் போதும் வீழும் போதும் தாங்கிட வாருமே - 2 வாரும் வாருமே என்னில் நிறைவாய் வாருமே - 2 |