Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1372-தூய ஆவியே துணையாய்  
தூய ஆவியே துணையாய் வாருமே - 2

அன்பினாலே அகிலம் காக்கும் அமைதி தெய்வமே
என் அமைதி தெய்வமே (தூய ஆவியே... - 2)

ஆற்றலாலே அனைத்தும் ஆக்கும் ஆன்ம நேசமே
என் ஆன்ம நேசமே (தூய ஆவியே... - 2)

இனிய அன்பின் இயக்கமான இதய தாகமே
என் இதய தாகமே (தூய ஆவியே... - 2)

ஈடில்லாத ஈகையாலே ஈந்த தெய்வமே
யாவும் ஈந்த தெய்வமே (தூய ஆவியே... - 2)

உண்மையாகி உயிருமாகி உலவும் தென்றலே
எங்கும் உலவும் தென்றலே (தூய ஆவியே... - 2)

ஊடநெஞ்சின் ஊக்க மீதியின் ஊற்றின் நாதமே
ஞான ஊற்றின் நாதமே (தூய ஆவியே... - 2)

எங்கும் எதிலும் என்றும் வாழும் என் இறைதேவனே
என்றும் என் இறைதேவனே (தூய ஆவியே... - 2)

ஏழை நெஞ்சில் ஏக்கம் கண்ட ஏக தேவனே
அன்பின் ஏக தேவனே (தூய ஆவியே... - 2)

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்