தூய ஆவியானவர் பாடல் | 1370-தூய ஆவியே அபிஷேக |
தூய ஆவியே அபிஷேக நெருப்பே திருமுழுக்கால் இப்போ என்னை நிரப்பும் (2) வல்லமையின் ஆவியாரே என் மேலே - 2 அருட்பொழிவால் இப்போ என்னை நிரப்பும் - 2 வாழ்வு தரும் ஜீவத்தண்ணீர் ஊற்றாய் எழும்பட்டும் துன்பத்தில் தளராமல் நிலைத்து நிற்க (2) இரட்சகர் என் வாழ்வில் வரவேண்டும் இரட்சிப்பை நான் இன்று காண வேண்டும் எதிர் நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி தாரும் - 2 அனைத்தையும் கற்றுத் தாரும் தூய ஆவியே அனைத்தையும் நினைவூட்டும் ஞான ஆவியே (2) வரப்போகும் உண்மையை வெளிப்படுத்தும் நிறை உண்மை நோக்கி வழி நடத்தும் அருள் ஆட்சி வாழ்வு வாழ வேண்டும் - 2 அப்பா தந்தாய் அப்பா தந்தாய் என்று அழைக்க கடவுளின் பிள்ளையாய் சான்று பகர (2) வலுவற்ற நிலையில் துணை நிற்பாய் பெரு மூச்சாய் எனக்காய் பரிந்துரைப்பாய் இறை வேண்டுதலில் நிலைத்து நிற்க - 2 |