தூய ஆவியானவர் பாடல் | 1368-சுந்தரஜோதி வந்தருளாயா |
சுந்தரஜோதி வந்தருளாயா - எந்தன் நெஞ்சிலே எழுந்தருளாயா (2) தந்தையும் தாயும் நீ தலைவனும் துணையும் நீ (2) வேந்தனும் விருந்தும் நீ வேதனும் குருவும் நீ ஈசன் எமக்கு தந்த சிறந்ததோர் வரமும் நீ இயேசுவின் மாட்சியெல்லாம் இயம்பிடும் சாட்சியும் நீ (2) நேசமோடுருவாகி நின்றிடும் தெய்வமும் நீ (2) ஆசையைத் தீர்க்கின்ற அமுத பாற்கடலும் நீ கோவிலாய் உள்ளத்தை கொண்டாடிடும் தெய்வம் நீ மேவிய மனவிருளை விலக்கும் பரஞ்சுடர் நீ (2) பாவமாம் மாசகற்றும் பாவன தீர்த்தம் நீ (2) நாவுபோல் காட்சி தந்த நலந்திகழ் ஞானம் நீ |