Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1367-ஒளியூட்டும் இறையாவியே  


ஸஸ நிரித நிஸ ஸநி தப பப மா தா தா
ஸஸ நிரித நிஸ ரிஸ நித பபம தா தா
க பா மா கரி பாம கரி ஸா கபா மா கரி ஸா

ஒளியூட்டும் இறையாவியே என்றும்
வழிகாட்டும் நிறையுண்மையே
வழியறியாப் பேதை எந்தன்
துயர் நீக்கி துணைபுரிவாய்

அருளாகி பொருளாகி உயிர்களுக்குள் உயிராகி
வாழ்வோடு போராடும் நலிந்தவர்க்கு திடமாகி -2
இருளகற்றும் ஒளியாய் நீ வா மனக்
குறைபோக்கும் மருந்தாக வா - 2
வற்றாத கார்மழையே காலத்தின் அறிகுறியே
என் வாழ்வின் கருப்பொருளே வா

நீர்மீது அசைந்தாடி வையகத்தைப் புதிதாக்கி
பாவமென்னும் நோய் நீக்கிப் புதுவாழ்வின் ஊற்றாகி
புதுப் படைப்பாய் எனைமாற்ற வா எங்கும்
இறையாட்சி நிறைவேற்ற வா 2
தென்றலிலே பேசிடுவாய் திசை எட்டும் பரவிடுவாய்
என் மூச்சாய் விளங்கிடவே வா
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்